ETV Bharat / state

கார் மோதி இளைஞர் உயிரிழப்பு - thiruppathur district news

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே நெக்குத்தி நெடுஞ்சாலையில் கார் ஒன்று இளைஞர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வாணியம்பாடி அருகே கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு  திருப்பத்தூர் மாவட்டச் செய்திகள்  வாணியம்பாடி விபத்து  நெக்குத்தி விபத்து  நெக்குத்தி சுங்கச்சாவடி விபத்து  thiruppathur district news  youth died in car accident near to vaniyambadi
வாணியம்பாடி அருகே கார் மோதி இளைஞர் உயிரிழப்பு
author img

By

Published : Jan 8, 2020, 9:24 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள நெக்குத்தி தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள இருசக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் கடையில் ரோஷன் குமார் (22) என்பவர் வேலை செய்துவந்தார். வழக்கம் போல் தனது வீட்டிற்கு மதியம் உணவு உண்பதற்கு ரோஷன் நடந்துசென்றுள்ளார்.

அப்போது, வேலூரிலிருந்து அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் ரோஷன் மீது மோதியது. இதில், ரோஷன் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காரை துரத்திச் சென்று நெக்குத்தி சுங்கச்சாவடி அருகே மடக்கினர்.

வாணியம்பாடி அருகே கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

அதற்குள்ளாக காரில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் ரோஷன் குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், காவலர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பிஎம்டபிள்யூ கார் சென்னையைச் சேர்ந்த கிரானைட் தொழிலதிபருடைய கார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது, காரை ஓட்டிவந்தது யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ' திரௌபதி படத்தைத் திரையிடக் கூடாது ' - திரையரங்கு உரிமையாளர்களிடம் விசிகவினர் மனு

Intro:வாணியம்பாடி அருகே கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
Body:
வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பி.எம்.டபிள்யூ சொகுசு கார் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் மீது வேகமாக மோதியது இளைஞர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருபவர் ரோஷன் குமார் வயது 22 இன்று மதியம் தனது வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றபோது

வேலூரிலிருந்து அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார் இளைஞர் மீது மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்

விபத்து ஏற்பட்டுத்திய கார் நிற்காமல் வேகமாக சென்றது அங்கிருந்த பொதுமக்கள் காரை துரத்தி சென்று நெக்குந்தி சுங்கச்சாவடியில் நிறுத்தினர் காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில்

இச்சம்பவம் குறித்து அங்கு வந்த கிராமிய போலீஸார் இறந்துபோன ரோஷன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் விசாரணையில் சென்னையை சேர்ந்த கிரானைட் தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு கார் என்பது தெரியவந்துள்ளது

கார் ஓட்டி வந்தவரை போலீசார் தேடி வருகின்றனர் அதிவேகமாக வந்த கார் இளைஞர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.