வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள அரசு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 140 கலை, அறிவியல் உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
குடியரசு தலைவர், ஆளுநர் பங்கேற்பு
இங்கு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மார்ச் 10ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர்.
குடியரசு தலைவர் ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வருகை தர உள்ளதால் சேர்காடு அடுத்த முத்தரசிகுப்பத்தில் ஹெலிகாப்டர் இறங்க ஏதுவாக ஹெலிபேட் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் நேற்று (பிப்.26) ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு தேசிய விருது வழங்கிய குடியரசுத் தலைவர்