ETV Bharat / state

‘கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் 272 பேர் கைது’ - வேலூர் காவல் கண்காணிப்பாளர் அதிரடி!

author img

By

Published : Jul 5, 2023, 11:07 PM IST

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 40 நாட்களுக்கு நடத்தப்பட்ட கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் 272 பேர் கைது செய்து, 15 பேரை தடுப்புக் காவலில் அடைத்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் கள்ளச்சாராய தடுப்புச் சோதனை
வேலூரில் கள்ளச்சாராய தடுப்புச் சோதனை

வேலூரில் கள்ளச்சாராய தடுப்புச் சோதனை

வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர கள்ளச்சாராய தடுப்பு வேட்டையின் மூலம் கடந்த 40 நாட்களில் மட்டும் 272 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 112 பேரை கைது செய்திட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தீவிரப்படுத்தப்படும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டை: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக என்.மணிவண்ணன் கடந்த மே மாதம் 25ஆம் தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்றவுடன் வேலூர் மாவட்டத்தை கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, உள்ளூர் காவல் நிலையங்கள் மட்டுமின்றி புதிதாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அல்லேரி, சாத்கர், ஜார்தான்கொல்லை உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும், நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளிலும் தினமும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது.

இந்த தேடுதல் வேட்டையில் வேலூர் சரக காவல் துணைத்தலைவர் (டிஐஜி) எம்.எம்.முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும் நேரடியாக ஈடுபட்டு வந்தனர். மலைப் பகுதிகளில் டிரோன் கேமராக்களை பயன்படுத்தி இந்த சாராய தடுப்பு வேட்டை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் கடந்த மே மாதம் 25ஆம் முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் மொத்தம் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 272 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தலைமறைவான 112 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, “கைது செய்யப்பட்டவர்களில் தொடர்ந்து கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு வந்த 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்பு வேட்டையின் மூலம் சுமார் 55ஆயிரத்து 900 லிட்டர் சாராய ஊறல், சுமார் 13ஆயிரத்து 858 லிட்டர் கள்ளச்சாராயம், 3ஆயிரத்து 372 மதுபுட்டிகள், சுமார் 5ஆயிரத்து 110 கிலோ வெள்ளை சர்க்கரை, 870 கிலோ வேலம்பட்டை, 700 கிலோ சாராய ஊறலுக்கு பயன்படும் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர்த்து, சாராய கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 23 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இருக்கும். இந்த தடுப்பு வேட்டையின்போது சுமார் 34ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புடைய 3.450 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3ஆயிரத்து 110 வெளிமாநில மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இனிமேல் கஞ்சா, சாராயம் காய்ச்சுவது, விற்பது போன்ற செயல்களை மேற்கொள்ள முடியாது என்று அவர்கள் உணரும் வரை இந்த சாராய தடுப்பு வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கடத்துவது, விற்பது போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதைத்தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா, சாராயம், மதுபானங்கள் கடத்தி வருவதைத் தடுக்க மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்படுகிறது” என்றார்.

ரூ.65 லட்சம் மறுவாழ்வு நிதிக்கு ஒப்புதல்: தொடர்ந்து பேசிய அவர், “கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் புதிய திட்டங்களும் அமல் படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சாராய தடுப்பு வேட்டையின்போதே பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாராயம் காய்ச்சுவது முற்றிலும் ஒழிக்கப்பட்ட பிறகு மனம் திருந்தி வருவோருக்கு, மறுவாழ்வு நிதி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், தற்போது மனம் திருந்திய முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகள் 219 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.65 லட்சம் மறுவாழ்வு நிதி வழங்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு பிஎச்டி கட்டாயமில்லை... யுஜிசி அதிரடி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.