திருவண்ணாமலை, சித்தூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்துகொண்டன. குறைந்த நேரத்தில்பந்தய தூரத்தைக் கடந்து இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும் காளை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
மஞ்சுவிரட்டு விழாவில் இளைஞர்கள் ஓடும் காளைகளை மடக்க முயற்சி செய்ததும் அவர்களை பொருட்படுத்தாமல் காளைகள் ஓடியது பாரம்பரிய விளையாட்டான மஞ்சுவிரட்டிற்கு எடுத்துகாட்டாக அமைந்தது. பயங்கர ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்த மஞ்சு விரட்டு காளைகளைக் காண்பதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக 300க்கும் மேற்ப்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் காளைகள் ஓடும்போது அதை பிடிக்க முயன்ற 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஊரக வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு