ETV Bharat / state

‘பேராசிரியரை முதலில் மேடையேற்றியது அண்ணாதான்’ - வைகோ பேச்சு - காட்பாடியில் தமிழ் இயக்கம்

வேலூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய வைகோ அண்ணா தான் முதலில் பேராசிரியரை மேடை ஏற்றினார் என்று தெரிவித்தார்.

பேராசிரியருக்கு வைகோ புகழாரம்
பேராசிரியருக்கு வைகோ புகழாரம்
author img

By

Published : Feb 12, 2023, 9:26 AM IST

பேராசிரியருக்கு வைகோ புகழாரம்

வேலூர்: காட்பாடியில் தமிழ் இயக்கம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா, விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (பிப். 11) நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அமைச்சர் துரைமுருகன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நான் இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியது. அதை அறிந்து எனது வீட்டில் வந்து பார்த்து, என்னை பார்த்து வந்துவிட்டாயப்பா என கூறி கட்டிப்பிடித்து அழுதார் பேராசியர். திருவாரூரில் திராவிடர் கழகம் வளர பேராசிரியரின் தந்தையும் காரணம். பேராசியரின் மாமனாரின் வீட்டில் இருந்து தான் அண்ணா முதல் அமைச்சரவையை அமைத்தார். அது அண்ணாவை காவல் துறை தேடிய காலம்.

அண்ணா தான் முதலில் பேராசிரியரை மேடை ஏற்றியவர். அங்கு தான் கலைஞரோடு பழக்கம் ஏற்படுகிறது. 1942ஆம் ஆண்டு கால கட்டத்தில் அண்ணா பேசிய பேச்சுகள் இப்போது வரை கிடைக்கவில்லை. கல்லூரி படிக்கும் காலத்தில் அவர் ஒரு சிறந்த பேச்சுத் திறமை உடையவராக திகழ்ந்தார். இவர் பல இடங்களில் உரையாற்றியதை அண்ணா விரும்பி கேட்பார்.

திராவிட இயக்கத்தை வளர்க்க பேராசிரியரும் கலைஞரும் அதிக அளவில் பாடுபட்டனர். ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் பேராசிரியர் உடைய பேச்சின் வேகம் அவரின் உணர்ச்சி வேறு யாராலும் ஏற்படுத்த முடியாது. ஒவ்வொரு பொது கூட்டத்திலும் பேராசிரியரின் பேச்சு அனல் பறக்கும், பேராசிரியர் பேச்சை போல் எங்கும் கேட்டது இல்லை, அவரது பேச்சை கேட்கும் போது மெய்சிலிர்க்கும்.

கடைசியாக நெருக்கடி நிலை ஏற்பட்டபோது, திமுக அரசுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணிய நேரத்தில் கோவையில் மாநில மாநாடு நடைபெற்றது. அது நான்கு நாள் மாநாடு. அப்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் கலைஞர் தான் கடைசியாக பேச வேண்டும். ஆனால் அதற்கு முன்பு நாவலர் பேச வேண்டும். அதற்கு முன்பு பேராசிரியர் பேச வேண்டும். அந்தக் கூட்டத்தில் அனைவரும் பேசினார்கள் ஆனால் பேராசிரியர் பேசுகிறபோது சொன்னார்.

நான் இங்கே கலைஞரை அழைக்கிறேன் தலைமை தாங்க அழைக்கிறேன். அபாயங்களை விடுவிக்க வா அண்ணாவின் தூண்களான இதயமே வா அந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு அடுத்து சொல்லும் பொழுது “நான் பெரியாரின் சாயலை கலைஞரை பார்க்கிறேன், பெரியாரின் துணிச்சலும் பெரியாரின் உறுதியும் நான் கலைஞரிடத்திலே காண்கிறேன், அதைப்போல அண்ணாவின் சாயலை கலைஞர் எழுத்தில் பார்க்கிறேன் காமராஜரின் சாயலை கலைஞர் இடத்தில் பார்க்கிறேன் இவ்வாறு பேராசிரியர் அந்த கூட்டத்தில் பேசினார்.

அடுத்ததாக, “ஒரு ராஜதந்திரத்தை இன்னொரு ராஜதந்திரத்தை எப்படி முறியடிக்க முடியும் என்பதை ராஜாஜி சாயலை கலைஞர் பார்க்கிறேன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாயலை கலைஞர் இடத்தில் பார்க்கிறேன்” என்று பேசினார். அந்தக் கூட்டத்தில் பேசியது அனைவரும் வியந்து போனார்கள். பேராசிரியர் பேச்சாற்றல் மிக்கவர் மட்டுமல்ல திராவிட இயக்கத்தை வளர்க்க அவரும் அவரது தந்தையும் அரும்பாடு பட்டவர்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தல்: பாஜகவின் தாமதமான நிலைப்பாடு.! ஈபிஎஸின் நடவடிக்கை என்ன..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.