ETV Bharat / state

குடியாத்தத்தில் குலதெய்வ பூஜை ஏற்பாட்டில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு! - Update news in tamil

Two people died due to electric shock: குடியாத்தத்தில் வீட்டில் நடைபெற்ற குலதெய்வ பூஜை ஏற்பாட்டின் போது மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தத்தில் குலதெய்வ பூஜை ஏற்பாட்டில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு... ஒருவர் படுகாயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 7:48 PM IST

வேலூர்: குடியாத்தத்தில் வீட்டில் குலதெய்வ பூஜை ஏற்பாட்டின் போது மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் காளியம்மன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவருடைய வீட்டில் நாளை (நவ.20) குலதெய்வ பூஜை நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இதற்காகச் சந்திரனின் உறவினர்கள் பலர் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டின் வாசலில் வாழைமரம் கட்டுவதற்காக பணிகளை முகிலன் கிஷோர் மற்றும் பிரியா ஆகியோர் செய்துள்ளனர். அப்போது வாழை மரம் கட்டுவதற்காக இரும்பு கம்பிகளை எடுத்துக் கொடுக்கும் போது மின்சாரக் கம்பி மீது உரசியதில் மூன்று நபர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், முகிலன், கிஷோர் மற்றும் பிரியா ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து மூன்று நபர்களையும் உடன் இருந்த உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர் முகிலன் மற்றும் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறி உடலை உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதில், படுகாயம் அடைந்த பிரியா என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து குடியாத்தம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினரின் குலதெய்வ பூஜையில் கலந்து கொண்ட உறவினர்கள் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பெங்களூருவில் நடைபாதையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தாய், 9 மாத குழந்தை பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.