ETV Bharat / state

'என்னை மனநலம் பாதிக்க வைத்து விட்டார்கள்!'- சமூக ஆர்வலர் முகிலன் குமுறல் - வேலூர்

வேலூர்: ஆந்திராவில் மீட்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன், 'தன்னை மனநலம் பாதிக்க வைத்தார்கள்' என்று வேதனை தெரிவித்துள்ளார்.

police
author img

By

Published : Jul 7, 2019, 11:14 AM IST

Updated : Jul 7, 2019, 4:06 PM IST

சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் மாயமானார். அவரை மீட்டுத் தரும்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில், ஆந்திர ரயில்வே காவல்துறையினர் நேற்று முகிலனை மீட்டனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்தில் தமிழ்நாடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அங்கு, வேலூர் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், சிபிசிஐடி காவல் துறையினர் முகிலனிடம் 30 நிமிடம் விசாரணை நடத்தினர்.

பிறகு, துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்புடன் வெளியே அழைத்து வரப்பட்டபோதும் கூட, "தடை செய்... தடை செய்... ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்..அணுக்கழிவு கொட்டுவதை தடை செய்" என்று அந்த நடுங்கும் குரலில் முகிலன் ஆவேசத்துடன் முழங்கியபடி சென்றார்.

அப்போது, அங்கிருந்த முகிலனின் ஆதரவாளர்கள் சிலரும், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விவரம் அறியாத பயணிகள் வியப்புடன் பார்த்தனர்.

பின்னர், முகிலன் காவல்துறை வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வேலூர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து முகிலனை காவல் துறையினர் அழைத்துவரும் காட்சி

அங்கு, அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, மீண்டும் பலத்த பாதுகாப்புடன் முகிலன் வெளியே அழைத்து வரப்பட்டார்.

அப்போது ஆர்வத்துடன் வெளியே காத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், " காலை 10 மணிக்கு ஆந்திராவில் 7 தமிழர்களை (ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள்) விடுதலை செய்யக் கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்தினேன். அப்போது, என்னை கைது செய்தார்கள். பிறகு, இரவு 10 மணிக்கு தன்னை காட்பாடிக்கு அழைத்து வந்தார்கள். இரண்டு மாதங்களாகத் தன்னை மனநலம் பாதிக்க வைத்தார்கள்" எனக் குமுறினார். அவரை பேசவிடாமல் காவல்துறையினர் வேகமாக அழைத்து சென்றனர்.

Intro:என்னை மனநலம் பாதிக்க வைத்துவிட்டார்கள் - ஆந்திராவில் மீட்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் குமுறல்
Body:சமூக ஆர்வலர் முகிலன் கடந்த சில மாதங்களாக மாயமானார் அவரை மீட்டு தரும்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது சிபிசிஐடி போலீஸார் முகிலன் வழக்கை விசாரித்து வந்தனர் இந்த நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஆந்திர ரயில்வே காவல்துறையினர் இன்று முகிலனை மீட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் முகிலனை ஆந்திர ரயில்வே காவல்துறையினர் ஒப்படைத்தனர் அங்கு வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் சிபிசிஐடி காவல்துறையினர் முகிலனிடம் சுமார் அரை மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர் பின்னர் இந்த விசாரணைக்கு பிறகு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வரப்பட்ட போது முகிலன் தடை செய் தடைசெய் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய் என்று ஆவேசத்துடன் கோஷம் எழுப்பினார் அப்போது அங்கிருந்த முகிலனின் ஆதரவாளர்கள் சிலரும் கோஷம் எழுப்பியதால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து விவரம் அறியாத பயணிகள் வியப்புடன் பார்த்தனர் பின்னர் முகிலன் காவல்துறை வாகனம் மூலம் அழைத்து செல்லப்பட்டு வேலூர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார் அதன் பிறகு மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சுமார் அரை மணிநேரம் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன பிறகு மீண்டும் பலத்த பாதுகாப்புடன் முகிலன் வெளியே அழைத்து வரப்பட்டார் அப்போது பேசிய முகிலன், " காலை 10 மணிக்கு ஆந்திராவில் 7 தமிழர்களை (ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள்) விடுதலை செய்ய கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்தினேன். அப்போது என்னை கைது செய்தார்கள் இரவு 10 மணிக்கு காட்பாடி அழைத்து வந்தார்கள் இரண்டு மாதங்களாக என்னை மனநலம் பாதிக்க வைத்தார்கள்" என்று தெரிவித்தார். முகிலன் தற்போது உடல் மெலிந்த நிலையில் தாடியுடன் காணப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஆகியோரை சிபிசிஐடி காவல்துறை விசாரணைக்கு பிறகு சென்னைக்கு அழைத்து செல்வார்கள் என தெரிகிறதுConclusion:
Last Updated : Jul 7, 2019, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.