ETV Bharat / state

அடுத்தடுத்த 9 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.25 லட்சம் திருட்டு - வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு! - ஒடுகத்தூரில் 9 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் அடுத்தடுத்த 9 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் உள்பட 1.25 லட்சம் ரூபாய் திருடு போன சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 19, 2023, 9:14 PM IST

வேலூர்: அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் அடுத்தடுத்த 9 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.25 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன் (50), வெங்கடேசன் (51). இவர்கள் இருவரும் ஒடுகத்தூர்-மேல் அரசம்பட்டு சாலையோரம் தனித்தனியே அடுக்குமாடிகள் கட்டி, கடைகளை வாடகைக்கு விட்டு வருகின்றனர்.

இங்கு மாட்டுத் தீவனம், ஹோட்டல், சலூன், மளிகை, பழக்கடை, டீக்கடை, வெல்டிங் ஷாப், மோட்டர் பழுதுபார்க்கும் கடை உள்ளிட்ட 9 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளை அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் இன்று ( ஏப்.19 ) காலை கடையைத் திறக்க கடையின் உரிமையாளர் வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

அருகே உள்ள விநாயகர் கோயில் உண்டியல் உட்பட டீக்கடையில் வைத்திருந்த பண், பிரெட், சிகரெட், ஸ்வீட், சப்போட்டா பழம் ஆகியவையும், மல்லிகை கடையில் இருந்த சாக்லெட், பிஸ்கெட் போன்ற தின்பண்டங்களையும் விட்டு வைக்காமல் சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பின்பு எடுத்துச் சென்றுள்ளனர்.

இவை தெரியாமல் இருக்க லைட் ஆப் செய்துவிட்டு இருட்டில் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து வேப்பங்குப்பம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இரும்பு ஆயுதங்களைக் கொண்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் யார்? என தடயவியல் நிபுணர்கள் மூலம் கைரேகை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து வேப்பங்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

ஒடுகத்தூர் அருகே 9 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மான் கொம்பு, நட்சத்திர ஆமைகளை வீட்டில் வைத்திருந்த NLC அதிகாரி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.