ETV Bharat / state

கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- எஸ்.பி. பிரவேஷ்குமார்! - வேலூரில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- எஸ்பி பிரவேஷ்குமார்

வேலூர்: ஊரடங்கு காலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

மலை பகுதி ஹெலிகேம் வீடியோ காட்சி
மலை பகுதி ஹெலிகேம் வீடியோ காட்சி
author img

By

Published : Apr 12, 2020, 1:02 PM IST

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தினந்தோறும் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் துறைக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை பிடிப்பதே பெரும் சவாலாகவும், தலைவலியாகவும் இருக்கின்றது.

வேலூர் மாவட்டம் ஆந்திர மாநில எல்லையை கொண்ட மலை பகுதிகளும், அணைகட்டு தொகுதியில் அதிக மலை பகுதிகளையும் கொண்டது. இந்த மலை பகுதிகளில் வழக்கமான நாள்களிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது வாடிக்கை. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் அரசு மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் தற்போது அதிகம் கள்ளச்சாராயத்தின் பக்கம் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

காவல் துறை கரோனா தடுப்பில் அதிக கவனம் செலுத்துவதை அறிந்த கள்ளச்சாராய விற்பனையாளர்கள், இதை தங்களுக்கு சாதகமாமக பயன்படுத்திக்கொள்ள நினைத்து அதிக அளவில் சாராயத்தை காய்ச்சி பாக்கெட்டில் அடைத்து கள்ளத்தனமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

டாஸ்மாக்கைவிடவும் விலை குறைவு, போதை அதிகம் என்பதால் மது பிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன.

குறிப்பாக கடந்த 2ஆம் தேதி அணைகட்டு அடுத்த புலிமேடு வெல்லண்டப்பன் கோயில் மலை அடிவாரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட ஊர் மக்கள் மூன்று பேர் மீது கள்ளச்சாராய வியாபாரிகள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக குற்றவாளிகள் மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எனவே கரோனா தடுப்பு பணிக்கு நடுவிலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மாவட்ட காவல் துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மலை பகுதிகளை ஹெலிகேம் (பறக்கும் கேமரா) மூலம் கண்காணித்தும் வருகின்றனர். ஊரடங்கு விதிக்கப்பட்ட நாள்முதல் தற்போதுவரை வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலை பகுதியில் சோதனையிடும் ஹெலிகேம் வீடியோ காட்சி

மேலும், 37 இருசக்கர வாகனங்கள், 1 கார், 3ஆயிரத்து 29 லிட்டர் சாராயம், 1 லட்சத்து 47 ஆயிரத்து 960 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 12ஆயிரத்து 100 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சாராய வேட்டை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரை தொடர்பு கொண்டு கேட்ட போது. “கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுவாகவே இவ்வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படும். தற்போது ஊரடங்கு காலத்திலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: வீட்டில் கள்ளச்சாராயம் தயாரித்த நபர்கள் கைது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.