வேலூர்: சலவன் பேட்டையில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து அரிசி கடத்தல் நடைபெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, நியாய விலைக் கடை நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் தற்போது 55 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு நியாய விலை கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில், சலவன் பேட்டையில் உள்ள கற்பகம் நியாய விலை கடையில் இருந்து (04AB018PN) தினந்தோறும் அரிசி கடத்தல் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், இக்கடையில் இருந்து இருவர் அரிசிக்கு பணம் கொடுத்து விட்டு, அரிசி மூட்டை பிரித்து எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இதற்கு தலைமையாக சபாபதி என்பவர் செயல்படுவதாகவும், அவரோடு சேர்ந்து அரிசி கடத்தலில் சிலர் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்யும், அரிசி கடத்தல் கும்பலை காவல் துறையும், உணவு பாதுகாப்பு துறையும் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி: முல்லைப் பெரியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை.. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குதூகலம்!