வேலூர்: பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே ராஜவேலு என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. இங்கு டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி வந்து இரவு மற்றும் காலை நேரங்களில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், ராஜவேலுக்கு சொந்தமான மளிகை கடையில் பேரணாம்பட்டு காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது கள்ளத்தனமாக விற்பனைக்காக மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராபர்ட் என்கிற ராஜசேகரை கைது செய்த காவல் துறையினர். கடை உரிமையாளர் ராஜவேலுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாமியார் கொடுமை: 4 மாத கர்ப்பிணி தற்கொலை