ETV Bharat / state

தோல்வியடைந்த வேட்பாளரை கேலி செய்த திமுக? - காவல் நிலையத்தில் புகார் - இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரை கேலி செய்வதாகவும், அதனை தட்டிக்கேட்டபோது திமுக கவுன்சிலர் மிரட்டுவதாகவும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் காவல் நிலையத்தில் புகார்

author img

By

Published : Feb 23, 2022, 3:49 PM IST

வேலூர்: வேலூர் மாநகராட்சி தேர்தலில் 32ஆவது வார்டில் இந்திய சமூக ஜனநாயக கட்சி சார்பில் சுஹாரா சுல்தான் போட்டியிட்டார். சுல்தானா தோல்வியடைந்த நிலையில் 32 ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ஹாஜிதா என்பவர் மீது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “தேர்தலில் நான் வெற்றி வாய்ப்பை இழந்தேன். வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்தவர்கள் என் வீட்டின் அருகே பட்டாசு வெடித்தனர். இதனால் எனது பேத்திக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர்களிடம் நான் கேட்க சென்றபோது அவர்கள் என்னை மிரட்டினர்.

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் காவல் நிலையத்தில் புகார்

தொடர்ந்து எங்களது குடும்பத்தினரை அச்சுறுத்தியும், கேலி செய்தும் வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு இருந்தால்; பாஜக விட பத்து மடங்கு வெற்றி பெற்று இருக்கும் - கே.எஸ். அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.