ETV Bharat / state

10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: தாயால் மாட்டிக் கொண்ட வாலிபர்! - பறிமுதல்

வேலூர்: செம்மரக்கட்டைகளை தனது மகன் வீட்டில் கடத்தி வைத்துள்ளார் என்று தாய் ஒருவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார், அதனை தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை செய்ததில் 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செம்மரக்கட்டை
author img

By

Published : Feb 11, 2019, 11:39 PM IST

வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நுண்ணறிவு போலீசார் லத்தேரி காவல் நிலைய போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின்னர், காவல் துறையினர் லத்தேரி பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது லத்தேரி அடுத்த கரசபாக்கத்தில் புல்லட் வாகனத்தில் ஒரு நபர் சந்தேகப்படும்படியாக சென்றுள்ளார். அவருக்குப் பின்னால் மினி லாரி ஒன்று பின்தொடர்ந்து சென்றது. போலீசார் மடக்கி உடனடியாக அந்த லாரியை சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரி மற்றும் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து லத்தேரி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் புல்லட்டில் சென்ற நபரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த நபர் பெயர் அமானுல்லா(29) என்பது தெரியவந்தது. லாரியில் இருந்த 3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் அமானுல்லாவை போலீசார் கைது செய்த சம்பவம் கேள்விப்பட்டு அவரது தாய் போலீசாரை தொடர்பு கொண்டார். அப்போது அவர் திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். அதாவது எனது மகனின் நடவடிக்கை சரியில்லை வீட்டில் மரக்கட்டைகளை அதிகளவில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக கரசப்பாக்கம் முஸ்லிம் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.

அங்கு அடுக்கடுக்காக செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மொத்தத்தில் அமானுல்லாவிடமிருந்து போலீசார் 10 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து காட்பாடி டிஎஸ்பி லோகநாதன் லத்தேரி காவல் நிலையம் வந்து விசாரணை நடத்தினார்.

undefined

பின்னர் வேலூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, வனச்சரகர் கோவிந்தராஜ் தலைமையில் வன அலுவலர்கள் காவல்நிலையம் வந்தனர். செம்மரக்கட்டைகள் ஒவ்வொன்றாக எடையிடப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அமானுல்லா தான் செம்மரக்கட்டைகளை கடத்தி வைத்திருந்தாரா அல்லது அவருக்கு பின்னால் வேறு ஏதாவது கடத்தல் கும்பல் செயல்படுகிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:வேலூர் அருகே லத்தேரியில் 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தாயால் மாட்டிக் கொண்ட வாலிபர்

Body:வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் நுண்ணறிவு போலீசார் லத்தேரி காவல் நிலைய போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர் பின்னர் இருவரும் சேர்ந்து இன்று அதிகாலை லத்தேரி பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர் அப்போது லத்தேரி அடுத்த கரசபாக்கத்தில் புல்லட் வாகனத்தில் ஒரு நபர் சந்தேகப்படும்படியாக சென்றுள்ளார் அவருக்குப் பின்னால் மினி லாரி ஒன்று பின்தொடர்ந்து சென்றது. போலீசார் மடக்கி உடனடியாக போலீசார் அந்த லாரியை மடக்கி சோதனை நடத்தினர் அப்போது அந்த லாரியில் செம்மர கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது இதையடுத்து லாரி மற்றும் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து லத்தேரி காவல்ஷநிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் மேலும் புல்லட்டில் சென்ற நபரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர் விசாரணையில் அந்த நபர் பெயர் அமானுல்லா (29) என்பது தெரியவந்தது. லாரியில் இருந்த 3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இதற்கிடையில் அமானுல்லாவை போலீசார் கைது செய்த சம்பவம் கேள்விப்பட்டு அவரது தாய் போலீசாரை தொடர்பு கொண்டார். அப்போது அவர் திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்தார் அதாவது எனது மகனின் நடவடிக்கை சரியில்லை வீட்டில் மரக்கட்டைகளை அதிகளவில் வைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார் இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக கரசப்பாக்கம் முஸ்லிம் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அங்கு அடுக்கடுக்காக செம்மரக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அனைத்தையும் பறிமுதல் செய்தனர் மொத்தத்தில் அமானுல்லாவிடமிருந்து போலீசார் இன்று 10 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர் இதையடுத்து காட்பாடி டிஎஸ்பி லோகநாதன் லத்தேரி காவல் நிலையம் வந்து விசாரணை நடத்தினார் பின்னர் வேலூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அடிப்படையில் வனச்சரகர் கோவிந்தராஜ் தலைமையில் வன அலுவலர்கள் காவல்நிலையம் வந்தனர் தொடர்ந்து செம்மரக்கட்டைகள் ஒவ்வொன்றாக எடையிடப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது அமானுல்லா தான் செம்மரக்கட்டைகளை கடத்தி வைத்து இருந்தாரா அல்லது அவருக்கு பின்னால் வேறு ஏதாவது கடத்தல் கும்பல் செயல்படுகிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Conclusion:பொதுமக்கள் அதிக நடமாட்டம் கொண்ட பகுதியில் அமைந்துள்ள வீட்டில் பத்து டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.