சோளிங்கர் அடுத்த மேலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (எ) முனுசாமி, இவர் செங்கல்பட்டு அடுத்த ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா, இவர்களுக்கு ஹரினி (4) என்ற சிறுமியும் தர்ஷன் (2) என்ற சிறுவனும் உள்ளனர்.
இன்று மதியம் சுரேஷ், அவரது மனைவி சுகன்யா இருவரும் கூலி வேலைக்கு சென்ற நிலையில் ஹரினி, தர்ஷன் இருவரும் அதே பகுதியில் உள்ள குளக்கரையில் விளையாடியதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக குளக்கரையின் மண் சரிந்து இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் குளத்தில் குதித்து நீரில் மூழ்கிய இரு குழந்தைகளை வெளியே எடுத்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாணாவரம் காவல்துறையினர் குழந்தைகளின் சடலங்களைல் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் இறந்ததால் கிராமமே சோகத்தில் முழ்கியது.
இதையும் படியுங்க: பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து - 3 பேர் உயிரிழப்பு