வேலூர்: காட்பாடி அருகே லத்தேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை லத்தேரி மட்டுமின்றி அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களும் சிகிச்சை பெற பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சூழலில் இங்கு நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாததால் சிகிச்சைக்காக வருவோர் வெளியில் காத்திருக்கவும், படுத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நோயாளிகள் அமர்வதற்க்கு கூட இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பைகளோடு சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் பொது மக்கள் மற்றும் நோயாளிகள் முகம் சுளிப்புக்கு ஆளாகின்றனர். அடித்தட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் லத்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் கவனத்தில் கொண்டு விரைந்து சீரமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என லத்தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்பார்க்கிறனர்.
இதையும் படிங்க: காப்பீடும் இல்லை! அங்கீகாரமும் இல்லை! அவல நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள்