ETV Bharat / state

வேலூரில் பொங்கல் பரிசு வரும் 9ஆம் தேதி வழங்கல்!

வேலூர்: பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

pongal-freebies-will-be-offering-on-9th-says-vellore-collector-shanmuga-sundaram
வேலூரில் பொங்கல் பரிசு வரும் 9ஆம் தேதி வழங்கல்!
author img

By

Published : Jan 5, 2020, 2:17 PM IST

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 9ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளத்துக்கு கரும்பு, ஐந்து கிராம் ஏலக்காய் உள்பட சிறப்பு பொங்கல் தொகுப்புடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் நாளை பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வரும் 9-12ஆம் தேதிவரை வேலூர் மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

விடுபட்டவர்களுக்கு 13ஆம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அனைவரும் குடும்ப அட்டையை எடுத்துச் சென்று பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: ‘பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளை சேருங்கள்!’ - விவசாயிகள் கோரிக்கை

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ம் தேதி முதல் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்Body:வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ம் தேதி முதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை 2 அடி நீளத்துக்கு கரும்பு 5 கிராம் ஏலக்காய் உட்பட சிறப்பு பொங்கல் தொகுப்புடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது அதன்படி வேலூர் மாவட்டத்தில் நாளை பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைக்கிறார்கள் அதைத் தொடர்ந்து வரும் 9ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வேலூர் மாவட்டத்தில் அனைத்து நியாயவிலை கடை களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் விடுபட்டவர்களுக்கு 13ம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் அனைவரும் குடும்ப அட்டையை எடுத்துச் சென்று பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.