ETV Bharat / state

வேலூர் நீதிமன்றத்தில் முருகனை சந்தித்த நளினி! - வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரான முருகன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன் சிறையிலிருந்த போது, பெண் காவலரிடம் அவதூறாக நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரான முருகனை, அவரது மனைவி நளினி சந்தித்து பேசினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 14, 2022, 7:02 AM IST

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 12.11.2022 அன்று விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே முன்னதாக, முருகன் வேலூர் மத்தியச் சிறையிலிருந்தபோது, கடந்த 2020 ஆம் ஆண்டு சிறையில் பெண் காவலர் ஒருவரிடம் அவதூறாக நடந்துகொண்டதாக மத்தியச் சிறைத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4-ல் நடைபெற்று வருகிறது.

முருகன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதாலும் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக தொடர்ந்து, வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் முருகன்,
வழக்கு நேற்று (டிச.13) விசாரணைக்கு வந்தது.

டிச.27க்கு ஒத்திவைப்பு: இதற்காக, திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4-ல் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் டிச.27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து முருகன் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்த முருகனை அவரது மனைவி நளினி சந்தித்துப் பேசினார்.

இதையும் படிங்க: பெண் காவலரிடம் அவதூறு தொடர்பான முருகன் வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.