வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், தனக்கு ஆறு நாள் அவசரகால விடுப்பு வழங்கக்கோரி சிறைத்துறைக்கு மனு அளித்திருந்தார். இந்நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள தனது மகளுடன் வீடியோ காலில் பேச, தற்போது பரோலில் வெளியில் உள்ள தனது மனைவி நளினியை பார்க்க என 6 நாள்கள் அவசர கால விடுப்பு கேட்டு முருகன் மனு அளித்திருந்தார்.
சிறையில் உள்ள முருகன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முருகன் கேட்ட அவசர கால விடுப்பு வழங்கப்படாது எனக்கூறி அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்குத் தடை : தமிழ்நாடு பார் கவுன்சில்