வேலூர் மாவட்டத்தை அடுத்த சலவன்பேட்டைப் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (43). கட்டடத் தொழிலாளியான இவர் தினமும் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆணைக்குளத்தம்மன் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.
இன்றும் வழக்கம் போல் முருகவேல் ஆணைக்குளத்தம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முருகவேலை செல்போனில் அழைத்துள்ளார். இதையடுத்து அவர் அவசர அவசரமாக கோயிலுக்கு வெளியே வந்தபோது அந்த நபருக்கும் முருகவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவேலை சரமாரியாக குத்திவிட்டு, தப்பியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முருகவேல் பணிபுரிந்த இடத்தில், அவர் பெண் ஒருவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும், அந்த பெண்ணின் கணவர்தான் முருகவேலை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!