வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பறக்கும்படையினர் தொகுதியின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, வாணியம்பாடி பேருந்து நிலையத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சென்ற 'ஹெச்டிஃஎப்சி' வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்தபோது உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.32 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தேர்தல் அலுவலர்கள் அப்பணத்தை வாணியம்பாடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை சமர்பித்த பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.