ETV Bharat / state

முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு பொங்கலுக்குப் பின் வீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி! - etv bharat tamil

Minister Gingee Masthan: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு, பொங்கல் பண்டிகை முடிந்து வீடுகள் வழங்குவதற்கு அடிக்கல் நாட்டுப்படும் என மாநிலம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் என தெரிவித்தார்.

Minister Gingee Masthan press meet
அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 12:56 PM IST

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

வேலூர்: வேலூர் சரகத்தில் உள்ள திருப்பத்தூர், கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள 21 பள்ளிவாசல் பராமரிப்புக்காக மானியம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (டிச.28) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் 134 பள்ளிவாசல்கள் சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.7 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தர்காவிற்கும் சீரமைப்பு நிதி ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ. 2 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் துறை சார்ந்த உலாமாக்கள் நல வாரியம் மூலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "சிறுபான்மையினர் ஏழை பெண்களுக்கு ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் 2 ஆயிரத்து 500 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 5 ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளில் வீடற்ற சிறுபான்மையின மக்களுக்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்க, ரூ.15 லட்சத்தை பெற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படுகிறது. அதன்படி பொங்கல் பண்டிகை முடிந்து அடுத்த கட்டமாக 3 ஆயிரத்து 500 வீடுகள் வழங்குவதற்கு அடிக்கல் நாட்டுப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.250 கோடி வக்பு வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்... அஞ்சலி செலுத்த கண்ணீருடன் குவியும் பொதுமக்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.