ETV Bharat / state

ஆளுநர் பதவியை அம்பேத்கர் மறுக்க காரணம் - அமைச்சர் துரைமுருகன் சொல்வதென்ன?

ஆளுநரின் வேலை கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டுமே என்றும் சமஸ்கிருதம் படிக்கக் கூறுவது அரசியல் சட்டத்தின் வரம்பை மீறுவதாகும் என்று கூறிய அமைச்சர் துரைமுருகன் இதனால் தான் அம்பேத்கர், ஆளுநர் பதவி வேண்டாம் என மறுத்ததாகவும் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 11, 2023, 9:03 AM IST

அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி பேச்சு

வேலூர்: தமிழர்களின் வரலாற்றைப் புரட்டினால், அதில் கிறிஸ்துவ மிஷினரிகளே ஏழைகளுக்கு கல்வியறிவை அளித்திருக்கும் என்றும், கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வதற்காகவே அனைத்து இடங்களிலும் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று (மார்ச்.10) நடந்த 67வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவில் சிறப்பு மலரை வெளியிட்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி வழியாக செல்லாத பேருந்துகளின் உரிமையை மறுநாளே ரத்து செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொள்வதாகவும், இதை நான் ஆணையாகவே தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளதாகவும்" கூறினார்.

நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவர், "இந்த மகளிர் கல்லூரி ஆரம்பிக்கும் போது 67 மாணவிகள் தான் படித்தார்கள் எனக் கூறினார்கள். இயேசு நாதரின் பின்னால் ஆரம்ப கட்டத்தில் 12 பேர் தான் இருந்தனர். ஆனால், இன்றைக்கு உலகம் அவர் கையில் உள்ளது.

ஒரு காலத்தில் கல்வியில் நாம் முன்னேறி இருந்தோம். ஒரு மொழிக்கு இலக்கியம் வகுத்து தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு என பல நூல்களையும் இயற்றியிருந்தோம். சந்தனம் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்திருந்தோம் பூம்புகார் கரையில் இருந்தன. அப்படி இருந்த ஒரு நாகரீகம் திடீரென மண் முடிப்போய் நம் இனம் என்ன? மொழி என்ன? என்பது எல்லாம் மறைந்து போய் நாம் யார்? என்பது மறந்து போய் விட்டது.

அப்படி மறந்துபோனவனை ஞாபகப்படுத்தியது, இதே கிறிஸ்தவ மதம் தான் என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். மதத்தை பரப்ப வந்த கார்டுவெல் தான் சொன்னார். உன் மொழி 'தமிழ்மொழி' என்று அதில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு, அதிலிருந்து பிறந்தது தான் கன்னடம், அதன் பின் பிறந்தது தான் மலையாளம் என ஞாபகப்படுத்தியவர் கார்டுவெல்.

எழுத்தை அச்சில் காட்டியது சீமல் பாபு தரங்கம்பாடியில், அழிந்து போன மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரத்தை ஆய்வு செய்து பாதர் மார்செல் கண்டுபிடித்துவிட்டு இது திராவிட சிவிலைசேசன் (Dravidian Civilization) எனக் கூறினார்.

வெள்ளைக்காரன் நம்மை ஆண்டான், அது வேறு. ஆனால், அவன் வராமல் போயிருந்தால், அதையொட்டி கிறிஸ்தவ மதம் உள்ளே நுழையாமல் இருந்திருந்தால் நமக்கு நாம் யார்? என்பதே மறந்து போயிருக்கும். தமிழர்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் எல்லாம் செய்து கொடுத்தவர்கள் அவர்கள். அவர்கள் தான் இந்த கல்வியை நாம் கற்க வேண்டும் என்று ஆங்காங்கே கல்வி நிலையங்களை கட்டி எழுப்பினார்கள். எனவே, அதனை நன்றி பெருக்கோடு நினைத்துப் பார்க்க வேண்டும். மதம் என்பது மனிதர்களை சாகடிக்கக்கூடியது தான்.

கேரளத்தில் நம்பூதிரி இனத்தை தவிர, மற்ற பெண்கள் யாரும் தொப்பிலுக்கு கீழேயும் மார்பு முழுவதையும் மறைத்தபடி சேலை அணியக்கூடாது என்ற காட்டு மிராண்டித்தனமான கொடுமை நிகழ்ந்தது. அதை ஒழித்துக் கட்டியது கூட கிறிஸ்தவ மதம் தான். ஆகவே, அவர்கள் நாகரீகத்தை சொல்லிக் கொடுத்தவர்கள். நமக்கு வரலாறு, மொழி, இனத்தை சொல்லிக் கொடுத்தது அவர்கள்தான்.

இருமொழி கொள்கையை கொண்டு வந்தவரே 'பேரறிஞர் அண்ணா' தான். அதைத்தான் எங்கள் ஆட்சி இன்றைக்கு வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை படி என சொல்லுகிறார்கள். படி என்பதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், இதை ஆளுநர் சொல்லக்கூடாது.

ஆளுநர் உடைய வேலை இது அல்ல அவருடைய வேலை நாங்கள் அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடுவது தான். ஆனால், அவர் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என கூறுவது அரசியல் சட்டத்தின் வரம்பை மீறுவது ஆகும். இதனால்தான் அன்றைக்கே அம்பேத்கர் ஆளுநர் பதவி வேண்டாம் என்றார். ஆனால் இன்றைக்கு ஒரு மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் போய் ஊர் ஊருக்கு ஒரு ஆளுநர் வந்து விடுவார்கள் போல் உள்ளது" என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, "குறிப்பாக தமிழ்நாட்டில் அடித்தட்டில் உள்ள மக்கள் படிக்கவே முடியாத நிலையில், ஒரே ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்றிருந்ததாகவும், அதன் பின்னர் வந்த கிறிஸ்தவ மிஷனரிகளே அடித்தட்டு மக்களும் ஏழை மக்களும் என எல்லோரும் படிக்கக் கூடிய சூழல் உருவானதாகவும் பேசினார்.

மேலும் பேசிய அவர், முதலில் கிறிஸ்டியன் மிஷனரிகள் கன்னியாகுமரியில் தொடங்கியதால் தான், இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் உயர்ந்து இருப்பதாகவும், இதற்கு காரணம் கிறிஸ்துவ மிஷனரிகள் என்று கூறினார். இன்றைக்கு பல இடங்களில் கிறிஸ்துவ மிஷனரிகள் பரவி கல்வி அறிவை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, தமிழ்நாட்டில் புதுமைப் பெண் திட்டம் வந்த பிறகு உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 27% உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை.. தொண்டர்களும் தலைவரே.. கிருஷ்ணகிரியில் ஜே.பி.நட்டா..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.