ETV Bharat / state

மணமுடித்த காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் - திருப்பத்தூர்

வேலூர்: திருப்பத்தூரில் திருமணம் முடித்துக் கொண்டு வீட்டுக்கு தெரியாமல் தனித்தனியே வாழ்ந்துவந்த காதல் ஜோடி சரண்யா, கெளதம் ஆகியோர் பாதுகாப்புக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

vellore
author img

By

Published : Jun 21, 2019, 3:21 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் என்பவரது மகள் சரண்யா (25). எம்.பி.ஏ. முடித்து உள்ளார். இதேப் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகன் கௌதம் (26). இந்நிலையில், ஏழு ஆண்டுகளாக சரண்யா, கெளதம் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வீட்டுக்குத் தெரியாமல் இரண்டு பேரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் திரைப்பட பாணியில் வழக்கம்போல் அவரவர் வீட்டில் வாழ்ந்துவந்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

தங்களுக்கு திருமணம் ஆன விஷயத்தை இருவரும் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேரம் கிடைக்கும்போது ஜோடியாக வெளியே சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் சரண்யாவின் வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளதை அறிந்து பதறிப்போன சரண்யா இன்று தனது கணவர் கௌதமுடன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:வேலூரில் சினிமா பட பாணியில்

திருமணம் முடித்துக் கொண்டு வீட்டுக்கு தெரியாமல் தனித்தனியே வாழ்ந்து வந்த காதல் ஜோடி

பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்

Body:வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் இவரது மகள் சரண்யா (25) எம்பிஏ முடித்து உள்ளார் இதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகன் கௌதம்(26) சரண்யா, கெளதம் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வீட்டுக்கு தெரியாமல் இரண்டு பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் திரைப்பட பாணியில் வழக்கம்போல் அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். தங்களுக்கு திருமணம் ஆன விஷயத்தை இருவரும் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது நேரம் கிடைக்கும்போது ஜோடியாக வெளியே சென்று வந்துள்ளனர் இந்த நிலையில் சரண்யாவின் வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர் இதனால் பதறிப்போன சரண்யா இன்று தனது கணவர் கௌதமுடன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார் அப்போது இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.