காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (60). இவர் கடந்த 22ஆம் தேதி சாராய வழக்கில் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
இதையடுத்து இவருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டபின், வேலூர் தொரப்பாடியிலுள்ள பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கரோனா கண்டறிதல் சோதனை முடிவில் சின்னப்பொண்ணுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் பின்னர் கைதியான அவர் உடனடியாக அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது கரோனா சிறப்புப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: தவறாக நடக்க முயன்ற இளைஞரை துவைத்தெடுத்த பெண்!