ETV Bharat / state

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - குடும்பத் தகராறில் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்

வேலூர்: குடும்பத் தகராறில் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம்
author img

By

Published : Oct 10, 2019, 5:51 PM IST

Updated : Oct 10, 2019, 8:39 PM IST

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி இந்திராணி (35). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆனந்தன் சரிவர வேலைக்குச் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது.

மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம்

இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி தனது மனைவி இந்திராணியுடன் ஆனந்தன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து மனைவி தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து திமிரி காவல் துறையினர் ஆனந்தனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி செல்வம் பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில் மனைவியை கொன்ற ஆனந்தனுக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302-ன் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்தார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் ஆனந்தனை பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: 6 வயது சிறுமியை மாடியிலிருந்து தூக்கி வீசி கொடூரக் கொலை செய்த சித்தி!

Intro:வேலூர் மாவட்டம்

குடும்பத் தகராறில் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வேலூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்புBody:வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கரடிமடை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி இந்திராணி (35). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இந்நிலையில் ஆனந்தன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது இந்த நிலையில் கடந்த 2017 அக்டோபர் மாதம் 23ம் தேதியன்று தனது மனைவி இந்திராணியுடன் ஆனந்தன் தகராறில் ஈடுபட்டுள்ளார் அப்போது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து மனைவி இந்திராணியை ஆனந்தன் அடித்துக் கொலை செய்துள்ளார். திமிரி காவல்துறையினர் ஆனந்தனை கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு வேலூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி செல்வம் பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில் அவர், மனைவியை கொன்ற ஆனந்தனுக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ 1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் இதையடுத்து காவல்துறையினர் ஆனந்தனை பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்Conclusion:
Last Updated : Oct 10, 2019, 8:39 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.