ETV Bharat / state

'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' பட பாணியில் பலே திருட்டு.. ஆந்திர கும்பலை அள்ளிய வேலூர் போலீஸ்! - Four AP Youths arrested

ஆடம்பர காரில் வந்து செல்போன் ஆட்டைய போடும் ஆந்திர கும்பலை வேலூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆந்திர கும்பல்
கைது செய்யப்பட்ட ஆந்திர கும்பல்
author img

By

Published : Apr 5, 2023, 10:29 AM IST

காட்பாடி: வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், கோயில்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு புகார்கள் அதிகம் வந்த நிலையில், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கண்காணிப்பில் சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டது.

மேலும், அவர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் பொதுமக்களின் செல்போன்களை திருடிச் செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள், செல்போன்களை திருடிய பிறகு ஆட்டோவில் பயணித்து கிரின் சர்க்கிள் பகுதியில் இறங்கியதுடன் அங்கு தயாராக நின்றிருந்த சொகுசு காரில் ஏறிச் செல்வதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

காரின் பதிவெண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அடிக்கடி ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக அந்த கார் சென்று வருவது தெரியவந்தது இதையடுத்து, தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு சோதனைச் சாவடியில் சொகுசு காரின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர்.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அந்த கார் காட்பாடி வழியாக வேலூர் வந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து அந்த காரை பிடிக்க முயன்றபோது மீண்டும் சித்தூர் சென்றுவிட்டது. அந்த சொகுசு கார் எந்த நேரமும் காட்பாடிக்கு வர வாய்ப்பு இருந்ததால் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட சொகுசு கார் மீண்டும் நேற்று(செவ்வாய்கிழமை) காலை வேலூர் வந்தது.

காரில் வந்த சிலர் வழக்கம்போல் தனியாக பிரிந்துச் சென்று செல்போன்களை திருடிக் கொண்டு காரில் தப்பியபோது காட்பாடி காவல் துறையினர் காட்பாடி - குடியாத்தம் சாலையில் கரசமங்கலம் அருகே சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி அக்கிவேடு கிராமத்தைச் சேர்ந்த நக்கா வெங்கடேஷ் (22), மேகன்ஸ்ரீ (25), பானாசு பாலாஜி (20), கம்மத்தம் டேவிட் (35) என்று தெரியவந்தது.

இவர்கள் சொகுசு காரில் வேலூர், காட்பாடிக்கு வந்து செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து 14 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் அக்கிவேடு கிராமத்தைச் சேர்ந்த பலர் செல்போன் திருட்டை தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு இடங்களில் திருடிவரும் செல்போன்களை அக்கிவேட்டில் வைத்து ஐ.எம்.இ.ஐ நம்பரை மாற்றி குறைந்த விலைக்கு ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் விற்று வந்துள்ளனர்.

அதில், கிடைக்கும் பணத்தில் காரில் சென்று பல ஊர்களில் லாட்ஜ்களில் தங்குவது, மதுபானம் அருந்துவது என்று உல்லாசமாக இருந்துள்ளனர். மீண்டும் அந்த ஊரில் இருந்து செல்போன்களை திருடிக் கொண்டு அக்கிவேடு செல்கின்றனர். இவர்கள் நான்கு பேர் கும்பல் மட்டும் 500-க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடியதும் வேலூர், காட்பாடி பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடியதும் தெரியவந்துள்ளது.

கூட்ட நெரிசலில் பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை திருடியதும் இவர்கள் அலுமினிய ஃபாயில் பேப்பரில் சுற்றி நன்றாக 'ரப்பர் பேண்ட்' மூலம் கட்டிவிடுகின்றனர். இதனால், செல்போனை பறிகொடுத்த நபர் தனது செல்போனை தொடர்புகொண்டால் தொடர்பு கிடைக்காது. இந்த நூதன முறையை அவர்கள் ஒவ்வொரு செல்போன் திருட்டுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.

ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் வந்து செல்போன்களை திருடிச்சென்ற 4 பேர் கைதான நிலையில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினரை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

இதையும் படிங்க: கஞ்சா வேட்டையில் சிக்கிய 14.5 கிலோ தங்கம்.. சென்னை வந்த ஆம்னி பேருந்தில் அதிரடி வேட்டை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.