வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஏலகிரி மலையில் கனமழை பெய்ததால் திருப்பத்தூர் அடுத்த அருள்மிகு முருகன் திருக்கோயில் ஜலகாம் பாறை அருவியில் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள பெருமாபட்டு, ஜெடையனூர், குரிலிசாப்பட்டு, பள்ளவள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளிலும் கிணறுகளிலும் நீர் நிரம்பிவருகிறது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சுற்றுலாத் தலமான ஜலகாம் பாறை அருவியில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்துவருகின்றனர்.