வேலூர் மாநகராட்சித் தேர்தலில் 18ஆவது வார்டில் திமுக, அதிமுக, பாஜக, சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் சுமதி வெற்றிபெற்றதாகத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து திமுகவினருக்கான 150 வாக்குகள் குறைவாக இருப்பதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி அக்கட்சியினர் தேர்தல் அலுவலர்கள், பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல் வாக்குச் சாவடிக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட நேர இழுபறிக்குப் பின்னர் வேலூர் மாநகராட்சி 18ஆவது வார்டில் பாஜக வேட்பாளரே வெற்றிபெற்றதாகத் தேர்தல் அலுவலர்கள் மீண்டும் அறிவித்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் 2022: மாநகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்