ETV Bharat / state

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை - lockdown restrictions

வேலூர்: ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களைப் பிடித்து காவல் துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் - அதிரடி காட்டிய போலீசார்

author img

By

Published : Jun 1, 2021, 1:19 PM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக, ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அத்தியாவசியக் காரணங்களைத் தவிர, தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்களை கண்காணிக்க, மாவட்டக் காவல்துறை சார்பில் 57 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஆயிரம் காவல் துறையினர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கை மதிக்காமல், ஊர் சுற்றுபவர்களுக்கு காய்ச்சல், கரோனா பரிசோதனை செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று (மே.31) காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் வந்த பொது மக்களை வேலூர் வடக்கு காவல் துறையினர் மடக்கிப் பிடித்து கரோனா பரிசோதனையை மேற்கொண்டனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் - அதிரடி காட்டிய போலீசார்
இதே போல் குடியாத்தம், திருவலம், காட்பாடி பகுதிகளில் தேவை இல்லாமல் சுற்றித் திரிந்த 68 பேருக்கு காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பொன்னை ஆய்வாளர் காண்டீபன் தலைமையிலான காவல் துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.