வேலூர்: வேலூர் மாநகராட்சியின் 30ஆவது வார்டு கவுன்சிலர் முருகன், சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் சரவணன் என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவுன்சிலர் முருகன், சரவணனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு, ‘தற்பொழுது என்னால் பணத்தை திருப்பி தர முடியாது சிறிது காலம் அவகாசம் வேண்டும்’ என சரவணன் கேட்டுள்ளார். இதற்கு ஆதரவாக வேலூர் மாநாகரசியின் 24ஆவது வார்டு கவுன்சிலர் சுதாகர் பேசியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த முருகன், சுதாகரை வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சுதாகரை சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த சுதாகர், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கவுன்சிலர் முருகனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசியிடம் கேட்டபோது, “இருவரும் புகார் கொடுத்திருக்கிறார்கள் இருதரப்பு புகார்களையும் பெற்றுக் கொண்டு விசாரணை செய்து வருகிறோம்.
இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளதால் இது தொடர்பாக வழக்கு இன்னும் பதியப்படவில்லை என மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு” கூறினார்.இது போன்ற பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சண்டை போட்டுக் கொண்டதால் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாத வகையில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே வாரத்தில் ரூ.1000 வரை குறைந்த தங்கம்.. இன்றைய விலை நிலவரம் என்ன?