வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையை அடுத்த அனந்தலை கிராமத்திலுள்ள மலைகளில் புதிதாக 12 கல்குவாரிகள் அமைப்பதற்கு கனிமவளத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அனந்தலை கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், 'அனந்தலை கிராமத்தில் ஏற்கெனவே பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பாறைகளை உடைக்க வெடி வைக்கும்போது, சிறு சிறு கற்கள் அருகிலுள்ள கிராமங்களில் வந்து விழுகின்றது. இதனால் அந்த நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேலும் 12 கல்குவாரிகள் அமைக்க கனிமவளத்துறை ஏலம் வருகிறது’ என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள், கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து பூட்டியதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலரை மீட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: போலீஸ் என்று கூறி முதியவரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த நபர் கைது