ETV Bharat / state

சிறை அறையில் செல்போன் பறிமுதல்செய்யப்பட்ட வழக்கு: நவ. 29இல் முருகனை முன்னிறுத்த உத்தரவு - வேலூர்

சிறை அறையில் செல்போன் பறிமுதல்செய்யப்பட்ட வழக்கில் முருகனை மீண்டும் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிறுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 29-ம் தேதி முருகனை முன்னிறுத்த உத்தரவு

author img

By

Published : Nov 16, 2021, 6:20 AM IST

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவருபவர் முருகன். இவரது சிறை அறையிலிருந்து 2019 அக்டோபர் 18 அன்று சிறைக் காவலர்கள் சோதனையின்போது ஒரு செல்போன், பேட்டரி, சிம்கார்டு ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

இது தொடர்பாக வேலூர் மத்திய சிறைத் துறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின்கீழ் முருகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கானது வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கரோனா தொற்று காரணமாக கடந்த காலங்களில் சிறையில் இருந்தவாறே முருகனுக்கு காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெற்றது. தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள சூழலில், தன்னை நேராக நீதிமன்றத்தில் முன்னிறுத்தும்படி முருகன் சிறைத் துறை அலுவலர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதி பெற்று, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் கடந்த 9ஆம் தேதி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதித் துறை நடுவர் நீதிமன்றம் 1இல் முன்னிறுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி முகிலாம்பிகை நவம்பர் 15ஆம் தேதி முருகனை முன்னிறுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று (நவ. 15) மீண்டும் முருகன் மத்திய சிறையிலிருந்து அழைத்துவரப்பட்டு நீதிபதி முகிலாம்பிகை முன்பாக முன்னிறுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, முருகனை வரும் 29ஆம் தேதி மீண்டும் முன்னிறுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து முருகன் பலத்த காவல் பாதுகாப்போடு வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: Anna University Semester exam: டிச.13ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.