ETV Bharat / state

'கேபிள் டிவி கட்டணம் விரைவில் குறைக்கப்படும்' - உடுமலை ராதாகிருஷ்ணன் - minister udumalai radhakrishnan

வேலூர்: தமிழ்நாட்டில் கேபிள் டிவி கட்டண குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று வேலூர் தேர்தல் பரப்புரையின்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.

உடுமலை ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Jul 24, 2019, 12:51 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆக. 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். திமுக, அதிமுக நாம் தமிழர் ஆகிய மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதால் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கடும் சரிவை சந்தித்தது. அதனால், இந்தத் தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக, அதிமுக அமைச்சர்கள் வேலூரில் முகாமிட்டுள்ளனர். அதன்படி நேற்று அனைத்து துறை அமைச்சர்களும் வேலூர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இன்று அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், செங்கோட்டையன் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது, உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டண குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார். யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.

வேலூரில் உடுமலை ராதாகிருஷ்ணன் பரப்புரை

அதைத் தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், "உருது படிக்கும் மாணவர்களுக்கு உறுது மொழி புத்தகம் வரவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து மாணவர்களுக்கும் உருது மொழி புத்தகம் கிடைக்கும்" என்றார்.

Intro:தமிழகத்தில் கேபிள் டிவி கட்டண குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வாக்குறுதிBody:வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது இந்த முறை வேலூரில் திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர் பெரிய கட்சிகளைப் பொருத்தவரை திமுக அதிமுக நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதால் மும்முனை போட்டி உருவாகியுள்ளது இருப்பினும் அதிமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடும் சரிவை சந்தித்தது எனவே இந்த தேர்தலில் அதிமுகவுக்கு முக்கிய தேர்தல் என்பதால் அனைத்து அமைச்சர்களும் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் அதன்படி நேற்று அனைத்து துறை அமைச்சர்களும் வேலூர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார் இதைத் தொடர்ந்து இன்று அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரை நடத்துகின்றனர் இந்த நிலையில் இன்று வேலூரில் பரப்புரையில் ஈடுபட்டு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டண குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று வாக்குறுதி அளித்தார் வேலூர் அண்ணா சாலை பகுதிகளில் இன்று அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பரப்புரை செய்தனர். அப்போது பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்தார் எனவே விரைவில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார் அதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் உருது படிக்கும் மாணவர்களுக்கு உறுது மொழி புத்தகம் வரவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது எனவே வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து மாணவர்களும் உருது மொழி புத்தகம் கிடைக்கும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.