வேலூரின் முக்கிய சுற்றுலா தளமான கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக நேற்று (ஜனவரி 14) வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோட்டை அகழி நீரில் மூழ்கிக் கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டனர்.
அதன்பின் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார்? என்பது குறித்தும், கொலையா? தற்கொலையா? என்பது குறித்தும் வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய டிஜிபி