ETV Bharat / state

ஆம்பூர் மலை கிராமங்களில் அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

வேலூர்: ஆம்பூர்  மலை கிராமங்களில் தொடர்ந்து கால்நடைகளை தாக்கி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்பூர் அருகே  மலை கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஆடு மாடுகள் பலி அச்சத்தில் கிராம மக்கள்
author img

By

Published : May 10, 2019, 11:02 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அரங்கல்துருகம், அபிகிரிப்பட்டரை, பொன்னப்பள்ளி, கதவாளம் மலைக்கிராம மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஆனால் தற்பொழுது மழை இல்லாத காரணத்தால், இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள், கொட்டகைகள் அமைத்து ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த மலைப்பகுதியை ஓட்டியுள்ள வீடுகள் மற்றும் கொட்டகைகளில் கட்டிவைக்கப்படிருந்த கால்நடைகள் தொடர்ந்து சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இதுதவிர கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் இரண்டு முறை கூண்டு அமைத்தும் அந்த சிறுத்தை இன்னும் பிடிப்படவில்லை.

இவ்வாறு, மாதம் ஒருமுறை சிறுத்தைக்கு அக்கிராமத்தில் உள்ள கால்நடைகள் பலியாகி வருவதால், அக்கிராம மக்கள் கால்நடைகளை காட்டிற்கு மேய்சலுக்கு அனுப்ப மிகவும் பயந்து வருகின்றனர். தங்களின் பிள்ளைகளையும் வெளிய அனுப்ப முடியாமல் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். முதல் முறை சிறுத்தை ஊருக்குள் வந்த போது வனத்துறையினர் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் கால்நடைகள் காப்பற்றப்பட்டிருக்கும், ஆனால் வனத்துறையினர் மெத்தன போக்காக செயல்பட்டு வருகின்றனர். எனவே, வனத்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro: ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மற்றும் அபிகிரிப்பட்டரை மலைக்கிராமங்களில் கடந்த சில மாதங்களாக மலைப்பகுதியை ஓட்டியுள்ள வீடுகள் மற்றும் கொட்டைகளில் கட்டிவைக்கப்படிருந்த கால்நடைகள் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது மேலும் கடந்த ஒருவார காலமாக மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மலைப்பகுதி கிராம மக்கள் அச்சம்.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கிராமங்கள் அரங்கல்துருகம், அபிகிரிப்பட்டரை, பொன்னப்பள்ளி, கதவாளம் இச்சுற்றுவட்டார மக்களின் முக்கிய தொழில் விவசாயம்.

இப்பொழுது மழையும் இல்லாத காரணத்தால் தங்களின் நிலத்தில் கொட்டகைகள் அமைத்து ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அபிகிரிப்பட்டரையில் சிறுத்தை கடித்து குதறியதில் பலராமன் என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி பரிதாபமாக இறந்தது.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டுடிசம்பர் 27 ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் ஏரிக்கரை பகுதியில் சிறுத்தை தாக்கி 5 பேர் காயமைடந்தனர்.

ஆனால் அங்கு சிறுத்தை பிடிப்படவில்லை.

அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி அரங்கல்துருகம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி அரங்கல் துருகம் காப்புக்காட்டில் வனத்துறையினர் கூண்டு அமைத்தனர்.

ஆனால் மீண்டும் இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி அபிகிரிப்பட்டரை வனப்பகுதியை ஒட்டியுள்ள வெங்கடேசன் என்பவரது நிலத்தில் கட்டிவைக்கப்படிருந்த நான்கு ஆடுகள் சிறுத்தை தாக்கி உயிரிழந்தது.

இதனால் இக்கிராமமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாயினர் மறுபடியும் அபிகிரிப்பட்டரையில் வனத்துறையினர் சார்பில் பிப்ரவரி 20 ஆம்தேதி கூண்டு வைக்கப்பட்டது.

மீண்டும் மார்ச் 04 ஆம் தேதி அரங்கல் துருகம் பகுதியில் கீதா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மரத்தில் கட்டிவைக்கப்படிருந்த கன்று குட்டியை சிறுத்தை கொடுரமாக தாக்கியுள்ளது.

ஒரு மாத கால இடைவெளிகளில் சிறுத்தை தாக்கி கால்நடைகள் உயிரிழந்ததால் அக்கிராம மக்கள் தங்களின் கால்நடைகளை காட்டிற்கு மேய்சலுக்கு அனுப்ப மிகவும் பயந்து வருகின்றனர்.

தற்போது மீண்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு அபிகிரிப்பட்டரை கிராமத்தில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான ஆட்டை அவரது வீட்டின் அருகே சிறுத்தை வந்து அடித்து எடுத்துச்சென்றுள்ளது.

இவ்வாறு மாதம் ஒருமுறை சிறுத்தைக்கு அக்கிராமத்தில் உள்ள கால்நடைகள் பலியாகி வருகின்றன.

ஆனால் முதல் முறை சிறுத்தை ஊருக்குள் வந்த போது வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்காக செயல்பட்டு தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

Conclusion: மேலும் கோடை காலத்தில் பள்ளி விடுமுறையால் தங்களின் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே மிகவும் பயப்படுவதாக அக்கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.