ETV Bharat / state

Etv Bharat Impact: வேலூர் ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம்! - ஆவின் பால் பண்ணை

ஆவின் நிர்வாக பணி அலட்சியம் தொடர்பாக ஈடிவி பாரத் செய்தி வெளியிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட வேலூர் ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பணியில் அலச்சியம்; ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம்

author img

By

Published : Feb 17, 2023, 2:03 PM IST

வேலூர்: சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையிலிருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குப் பால் மற்றும் தயிர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 5,000 லிட்டர் தயிர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி உற்பத்தி செய்யப்பட்ட தயிர் பாக்கெட்டுகள் வேலூர் மாவட்ட ஆவின் நிர்வாகத்தின் மெத்தனப்போக்கினால் முகவர்களுக்கு விநியோகிக்கப் படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் முகவர்கள் தயிரின் தேவையால் அவதிக்குள்ளாகினர். மேலும் இதுகுறித்து வேலூர் ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டார்.

அந்த விசாரணையில், தயிர் தாமதமான அன்றைய தினம் (பிப்.12) பணியில் துணை மேலாளர் உமா மகேஸ்வரராவ் என்பவர் இருந்துள்ளார். அவரது பணி அலட்சியம் காரணமாகத் தயிர் மற்றும் மோர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. இதனையடுத்து ஆவின் துணை மேலாளர் உமா மகேஸ்வரராவை பணியிடை நீக்கம் செய்து ஆவின் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "தாங்ஸ் பாஸ்... வரட்டா".. மின்வேலியில் சிக்கிய யானைக்கு உதவிய வனத்துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.