ETV Bharat / state

வேலூரில் சேற்றில் சிக்கித் தவித்த மாடு; போராடி மீட்ட பொதுமக்கள்

வேலூர் மாநகராட்சியில் சேறும் சகதியுமான சாலையோர கால்வாயில் சிக்கித் தவித்த மாட்டை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் போராடி மீட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 28, 2022, 6:52 PM IST

Updated : Dec 28, 2022, 7:05 PM IST

வேலூரில் சேற்றில் சிக்கித் தவித்த மாடு; போராடி மீட்ட பொதுமக்கள்

வேலூர் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தெருக்களுக்கு சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதனிடையே, அப்பணிகளுக்காக சாலையோரங்களில் தோண்டப்பட்ட கால்வாய்கள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில், சத்துவாச்சாரியில் இருந்து கிரீன் சர்க்கில் செல்லும் சாலையோரம் உள்ள தெருவில் சாலைப்பணிகளுக்காக தோண்டப்பட்டு சேறும் சகதியுமாக உள்ள தடுப்புகளின் நடுவே இன்று அவ்வழியாக சென்ற மாடு ஒன்று சிக்கித் தவித்தது.

இதனைக் கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், நீண்ட நேரம் போராடி கால்வாயில் சிக்கிய மாட்டினை மீட்டனர். மேலும், இப்பகுதியை விரைந்து சீரமைக்க அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் 'நீலகிரி வரையாடு திட்டம்': அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

Last Updated : Dec 28, 2022, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.