வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு நேற்று (ஜூன்26) மட்டும் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முதல் முறையாக மாவட்டத்தில் ஒரே நாளில் பதிவான அதிகப்படியான எண்ணிக்கை ஆகும்.
இதனால் வேலூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1013 ஆக உயர்ந்துள்ளது. இதில், 327 பேர் குணமாகி வீடு திருப்பியுள்ளனர்.
நேற்று வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 69 பேர் நேதாஜி மார்கெட்டோடு தொடர்புடையவர்கள் ஆவார்கள். இதுவரை நேதாஜி மார்கெட்டோடு தொடர்புடையவர்களாக சுமார் 140 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இது தவிர பேர்ணாம்பட் வட்டார வளர்ச்சி பெண் அலுவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,1067 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
இதையும் படிங்க: 'விவசாயிகள் தங்களது வருவாய் தீர்வாயம் தொடர்பான புகார்களை இணையதளத்தில் பதிவேற்றலாம்'!