திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ஏகிரி மங்கலத்தைச் சேர்ந்தவர் வாசுகி. இவர் நேற்றிரவு (மே.23) தனது உறவினரைப் பார்ப்பதற்கு, தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் புறப்பட்டு சென்றார். சுப்பிரமணியபுரம் பகுதி அருகே சென்றபோது, ஸ்கூட்டியின் கண்ணாடியில் பாம்பு நெளிந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பயத்தில் சாலையில் திடீரென வாகனத்தை நிறுத்திய வாசுகி, ஸ்கூட்டிக்குள் பாம்பு இருப்பது குறித்து அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர், காவலர்கள் முத்தையா, குணசேகரன், தீயா மணிகண்டன், சுரேஷ், பசுபதி ஆகியோர் ஸ்கூட்டியில் புகுந்த பாம்பைப் பிடிக்க முயற்சித்தனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், ஒன்றரை அடி நீளமுள்ள குட்டிப் பாம்பை கண்ணாடிக்குள் இருந்து பத்திரமாக மீட்டனர். பிடிபட்ட பாம்பு விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்த பாம்பு என்று தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'எட்டே மாதத்தில் பத்தடி உயரம்' - மியாவாக்கி வனத்தின் மிரட்டும் வளர்ச்சி