திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி (Ranganathaswamy Temple, Srirangam) திருக்கோயிலில் நாளை அதிகாலை வைகுண்ட ஏகாதசி (Vaikuntha Ekadashi) பெருவிழாவின் முக்கிய திருவிழாவான 'பரமபத வாசல்' எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சந்தனு மண்டபத்திற்கு ரூ.4,000, கிளி மண்டபத்திற்கு ரூ.700 என அனுமதி சீட்டுகளும் விண்ணப்பித்து, அதனை கொடுக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாஜகவின் ஸ்ரீரங்கம் பகுதி பொறுப்பாளர்கள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வீட்டை இன்று (ஜன.1) முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நான்கு நாட்களாக வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்துகொள்வதற்கான பாஸ் கொடுக்காமல் அலைக்கழிப்பதாகக் கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவருடன் இருக்கும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி பாலு ஆக்ரோஷமாக அவர்களிடம் சண்டையிட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: New Year 2023: தஞ்சை பெருவுடையாருக்கு 32 வகையான பொருட்களால் அபிஷேகம்