திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மதலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவர் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பணியைச் செய்து வருகிறார்.
ஜான் கென்னடி தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கியதைக் கண்ட அவரது தந்தை சின்னப்பன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து, காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஜான் கென்னடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜான் கொன்னடி மரணம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்ககொண்டு வருகின்றனர்.