ETV Bharat / state

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் முகநூலில் லைக் செய்ததால் சிக்கிய இருவர்: போலிசார் சோதனை - banned facebook page

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் ஏற்கெனவே தொடர்பில் உள்ளதாக சந்தேகத்திற்கிடமான 2 நபரின் வீட்டில் திருச்சி மாவட்ட காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் முகநூலில் லைக் செய்ததால் சிக்கிய இருவர்

author img

By

Published : Nov 19, 2022, 6:24 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் சாகுல் அமீது மற்றும் ஷர்புதீன் என்ற இருவர் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் முகநூல் பக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்கள் லைக் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் இவர்கள் வீட்டில் சோதனை நடத்தியது.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் ஏற்கெனவே தொடர்பில் இருந்ததாக கூறப்படும் இனாம்குளத்தூரைச் சேர்ந்த சாகுல் அமீது மற்றும் ஷர்புதீன் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தலின் படி, திருச்சி மாவட்ட ஜீயபுரம் டிஎஸ்பி பாரதிதாசன், ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி, சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், ஜீயபுரம் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் 30 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அதன் பிறகு மூன்று மணி நேரம் நடந்த சோதனையில் இருவரிடமிருந்து ஹார்டுடிஸ்க், 2 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் முகநூலில் லைக் செய்ததால் சிக்கிய இருவர்

இதையும் படிங்க: 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்.. பெங்களூரு மாணவர்கள் மீது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.