திருச்சி மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மன்ற பொதுச் செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப அளிக்க வேண்டும், பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்த்தில் வலியுறுத்தப்பட்டது. வயது உச்ச வரம்பின்றி ஆசிரியர் பணி நியமனம் நடைபெற வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்னும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையும் படிங்க: ரேசனில் வழங்கப்படும் அரிசி தரமில்லை; ஜோதிமணி எம்பியிடம் பொதுமக்கள் வேதனை