ETV Bharat / state

விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்து தொடர் உண்ணவிரதப் போராட்டம்! - திருச்சி மாவட்டச் செய்திகள்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

trichy-farmers
trichy-farmers
author img

By

Published : Jan 4, 2020, 3:03 PM IST

அதில் அவர்கள்,

  • நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும்,
  • வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாயமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும்,
  • காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்புத் திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்புத் திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும்,
  • கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
  • இடுக்கி மாவட்டத்தை கேரளாவிலிருந்து பிரித்து தமிழ்நாட்டுடன் இணைத்து முல்லைப் பெரியாறு பிரச்னை, 58ஆம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
    போராட்டத்தின் போது

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் உண்ணாவிரதம் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. திருச்சி ஜங்சன் அருகே நடைபெறும் இப்போராட்டம் வரும் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் இரண்டாம் நாளான நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அய்யாக்கண்ணுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை வரை முதலமைச்சரை சந்திக்க ஆட்சியர் ஏற்பாடு செய்யாததால், இன்று மூன்றாம்நாள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அதில் ரத்தக் கண்ணீர் வடிக்கும் விதமாக முகத்தில் சாயம் பூசிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம்!

Intro:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆவது நாளாக விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Body:திருச்சி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆவது நாளாக விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும். வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து பிரித்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க வேண்டும். தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட வேண்டும்.
10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது லாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும், பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் நேற்று முந்தினம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடங்கியது.
திருச்சி ஜங்சன் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமும் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் வரும் 8ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது நாளான நேற்று போராட்டம் தொடங்கியது. அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அய்யாக்கண்ணுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக ஆட்சியர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து நேற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது ஆனால் உறுதி அளித்தபடி நேற்று மாலை முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தராததால் இன்று காலை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று விவசாயிகள் கோவணம் அணிந்து, பட்டை நாமம் போட்டு, ரத்தக் கண்ணீர் வடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி: அய்யாக்கண்ணு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.