திருச்சியில் பிரபல நகைக்கடை மலபார் கோல்டு ஜுவல்லரி திறப்பு விழா நடைபெற்றது. அதில், நடிகை தமன்னா பங்கேற்று கடையைத் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமன்னா," நான் நடித்து கொண்டிருக்கும் படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு இன்னும் வெளியாகததால், அது குறித்த தகவல்கள் தெரிவிக்கமுடியாது. நேர்மையான சினிமா ரசிகர்களுக்காக, புதிதாக எதாவது தரவே ஆசைப்படுவேன். அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிப்பதை விட படத்தின் தரம்தான் முக்கியம்.
ரஜினி, கமல் ஆகியோரை ரசிகர்களைப் போல் நானும் ரசிக்கிறேன். நடிகர்கள் தேசத்திற்குச் சேவை செய்ய விரும்புகிறார்கள். அது நல்ல விஷயம். அதனால் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கலாம். உங்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு தமன்னா பதில் கூறுகையில், எனக்குத் திருமணம் செய்ய நீங்களே மாப்பிள்ளை பார்த்துக் கூறுங்கள் என்றார்.
இதையும் படிங்க: வங்கி கடன் முகாமில் 'ஓவியா' - அலைமோதிய ரசிகர்கள் கூட்ட
ம்