திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறை சிவன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதி மாரியப்பன் (40), ராதிகா (35).
இவர்களுக்கு கீர்த்திவாசன்(8) என்ற மகன் இருந்தான். மாரியப்பன் கூலித்தொழிலாளி ஆவார். ராதிகாவின் நடத்தை மீது மாரியப்பனுக்கு சந்தேகம் இருந்துள்ளது.
இதன் காரணமாக மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அதுபோல நேற்று (அக்.21) இரவும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து இரவு மூன்று பேரும் வீட்டில் தூங்கினர். இந்நிலையில், இன்று (அக்.22) காலை அருகிலிருந்தவர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது ராதிகாவும், கீர்த்திவாசனும் படுக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
மாரியப்பனை காணவில்லை. மனைவி, மகனை கொலை செய்துவிட்டு அவர் தப்பியோடியது தெரியவந்தது.
இந்த இரட்டை கொலைகள் குறித்து சோமரசம்பேட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மாரியப்பனை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியை தகாத வார்த்தையில் திட்டிய நண்பரை கொலைசெய்தவர் கைது