திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு விழா வருகின்ற 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருநெடுந்தாண்டகத்துடன் இவ்விழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.
பகல் பத்து வைபோகத்தின் முதல் நாளான (04.12.2021) உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடக் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி,, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
![ஸ்ரீரங்கம் பகல் பத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-srirangam-festival-script-photo-tn10045_12122021095355_1212f_1639283035_322.jpg)
பகல் பத்து 2ஆம் நாள் (05.12.2021) : நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம் , வைரகாதுகாப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பகல்பத்து 3ஆம் நாள் (6.12.21) : நம்பெருமான் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைரஅபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி எழுந்தருளினார்.
![ஸ்ரீரங்கம் பகல் பத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-srirangam-festival-script-photo-tn10045_12122021095355_1212f_1639283035_526.jpg)
பகல்பத்து 4ஆம் நாள் (7.12.21) : நம்பெருமாள் தொப்பாரைக் கொண்டை, இரத்தின அபயஹஸ்தம் , வைர காதுகாப்பு ,முத்துச்சரம் , காசு மாலை அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு எழுந்தருளினார்.
பகல் பத்து 5ஆம் நாள் (08.12.2021) : நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகைக் காப்பு,விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்டதிருவாபரணங்களஅணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பகல் பத்து 6ஆம் நாள் (09.12.2021) : நம்பெருமாள் நீள்முடிகிரீடம், ரத்தின அபயஹஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், காசு மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
![ஸ்ரீரங்கம் பகல் பத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-srirangam-festival-script-photo-tn10045_12122021095355_1212f_1639283035_652.jpg)
பகல் பத்து 7ஆம் நாள் (10.12.2021) : நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை, கபாய் சட்டை, வைர அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், முத்துச்சரம் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பகல் பத்து 8ஆம் நாள் (11.12.2021) : நம்பெருமாள் முத்து கிரீடம், இரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், இரத்தின மகர ஹண்டிகை, முத்துச்சரம், அலங்காரத்தில் எழுந்தருளினார்.
![முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-srirangam-festival-script-photo-tn10045_12122021095355_1212f_1639283035_998.jpg)
பகல்பத்து 9ஆம் நாளான இன்று (12.12.2021) : நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம், காதுகாப்பு, முத்தங்கி, அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பின்னர். அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்தார. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
![முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-srirangam-festival-script-photo-tn10045_12122021095355_1212f_1639283035_808.jpg)
இதையும் படிங்க : தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் தரிசனம் தருவார் மீனாட்சி அம்மன்!