திருச்சி: சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழ்நாடு திரும்பிய சசிகலா அரசியலில் தீவிரமாகக் களமாடுவார் எனப் பேசப்பட்ட நிலையில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையில், கடந்த சில தினங்களாக அவர் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவருகிறார்.
அந்தவகையில் நேற்று திருவிடைமருதூரில் சாமி தரிசனம் செய்த அவர் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஸ்ரீரங்கம் மூலவர் ரங்கநாதர், தாயார், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோரது சன்னதிகளில் தரிசனம் செய்தார். அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் சாருபாலா சசிகலாவை சந்தித்தார்.