ETV Bharat / state

Manipur Violence:மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அமித்ஷா பதவி விலக வேண்டும் - முத்தரசன் காட்டம்

சமூக விரோதிகளின் புகலிடமாக பாஜக உள்ளதாகவும், தமிழக அரசின் அனுமதியில்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்றும் மணிப்பூர் விவகாரத்தில் மோடி மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமெனவும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
author img

By

Published : Jul 24, 2023, 8:23 PM IST

பிரதமர் மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என முத்தரசன் காட்டம்

திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று (ஜூலை 24) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கிய மோதல் இன்று வரை நடந்து வரும் நிலையில், அதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

குஜராத்தில் கலவரத்தை (Gujarat Violence) ஏற்படுத்தி பா.ஜ.க வெற்றி பெற்றனர். அதுபோல, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் ஒருபகுதியாக பொது சிவில் சட்டத்தை (Uniform civil code) கொண்டு வந்து மக்களை பிளவுப்படுத்தும் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக தெரிவித்தார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது விரைந்த அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர்கள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. குறிப்பாக, குட்கா வழக்கில் அனைத்து ஆதாரங்கள் இருந்தும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஆளுநர், அமலாக்கத்துறையும் ஆகிய யாரும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி போல மோடியின் ஆட்சி: மோடியின் ஆட்சி 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தில் இருசமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தி அந்த படத்தின் நாயகனான வடிவேல் வேடிக்கை பார்ப்பதை போல, மணிப்பூரில் இருசமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தி பிரதமர் மோடி வேடிக்கை பார்ப்பதாக கடுமையாக விமர்சித்தார். பா.ஜ.க ஆட்சியை தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் அரசியலமைப்பு சட்டம் மாற்றியமைக்கப்படும் என்பதால் தான், ஜனநாயகத்தை காக்கும் வகையில் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார். ஆகவே, என்.டி.ஏ கூட்டணியை இந்தியாவை புதைக்குழியில் தள்ளிய பா.ஜ.க தலைமையிலான அணி என தான் கூறவேண்டும் என்றார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் செய்யாத போதும், மணிப்பூர் சம்பவம் (Manipur Riots) குறித்து பிரதமர் விவாதிக்க முன்வர நாடாளுமன்றத்திற்கு வர மறுப்பதாகவும் ஆகவே, குடியரசு தலைவர் ஆட்சியை மணிப்பூரில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன்மூலம், அம்மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி சுமூக நிலை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மணிப்பூர் கலவரம் - மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: நாளை இந்தியா முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் அகில இந்திய அளவில் போராட்டம் நடைபெற உள்ளதாக கூறிய அவர், மணிப்பூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்ட முடியாது: மேலும் பேசிய அவர், தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட சாத்தியம் கிடையாது. அதே நேரத்தில், ஒன்றிய அரசு ஆய்வு செய்ய கொடுத்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார். தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வரன்முறை செய்ய வேண்டும். ஒப்பந்த முறையில் பணிக்கு விடும் முறை கைவிட வேண்டும், அவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். மணிப்பூர் குறித்து பேசுபவர்கள், வேங்கைவயல் பிரச்னையை (Vengaivasal Water Tank Issue) பற்றி தமிழகத்தில் யாரும் பேசவில்லை என்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முத்தரசன் அண்ணாமலைக்கு காது மந்தமாக கேட்பதாகவும், கண்ணும் தெரியவில்லை என்று சாடினார்.

கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் வேங்கைவயல் பிரச்னை தொடர்பாக குரல் கொடுத்து போராட்டம் நடத்தியதால், தற்போது சம்பந்தபட்டவர்கள் யார் விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார். பாஜகவை தவிர மற்ற எல்லோரும் வேங்கைவயல் பிரச்னையை பற்றி பேசியுள்ளனர் என்றார். 'ருசி கண்ட பூனையை போல்' குஜராத்தில் கலவரம் செய்து ஆதாயம் அடைந்தது போல், மணிப்பூரிலும் கலவரம் செய்து ஆதாயம் அடைய பாஜக முயற்சிப்பதாக கூறினார்.

பாஜக சமூக விரோதிகளின் கூடாரம்: இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அண்ணாமலை கூறுவதாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாக பா.ஜ.க உள்ளதாகவும் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவில் உள்ள சமூக விரோதிகளை கட்டுப்படுத்தினாலே அமைதி நிலவும் என்றும் சமூக விரோதிகள் அடைக்கலம் தேடுமிடமாக பா.ஜ.க உள்ளது என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தகுதியுள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குறைபாடுகள் ஏதேனும் வருமானால் அதை சரி செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "காந்திக்குப் பிறகு மோடிதான்..." - அமெரிக்காவில் மூத்த பத்திரிகையாளர் அஜய் சிங் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.