திருச்சி: இலால்குடி அருகே மாந்துறை நெருஞ்சலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் பண்ணையார். இவர், தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு திருச்சி அண்ணாமலை நகருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்த பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 100 சவரன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப்பொருள்கள், 12 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
![காவல் துறை விசாரணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-02-lalguditheft-7210723_04032022084545_0403f_1646363745_992.jpg)
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், வீட்டில் சோதனை நடத்தினர், தொடரந்து சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பார்வையிட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.22 லட்சம் மீட்பு!